முக்கிய செய்திகள்

“கோமாளி” ஆகிவிட்டார் ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அவரது 24 ஆவது படத்திற்கு கோமாளி என பெயரிட்டுள்ளனர்.

 ‘அடங்கமறு’ திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி இந்தப் படத்தில் நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார்.

வேல்ஸ் இண்டர்நேஷ்னல் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, கோமாளி திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். 

காமெடி திரைப்படமாக உருவாகிவரும் இத்திரைப்படத்தில் ஒன்பது வித்தியாசமான கெட்டப்களில் ஜெயம் ரவி வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு வருடங்களில் நடப்பது போன்ற கதைக்களம் என்பதால், இத்தனை கெட்டப்களில் ஜெயம் ரவி நடிக்கிறார் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் பிரதீப்.