
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே YouTube பார்த்து இயற்கை முறையில் மனைவிக்கு பிரசவம் பார்த்த இயற்கை ஆர்வலரால் மனைவி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது..
இயற்கை விவசாயமும், மருந்து மாத்திரைகள் உட்கொள்ளாமல் தானாகவே சுயமாக தொடு சிகிச்சை முறைகள் மேற்கொண்டுவந்த மாதேஷ், தனது மனைவிக்கு தடுப்பூசிகள் மற்றும் சத்து மாத்திரைகள் கொடுக்க செவிலியர் பலமுறை அழைத்தும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
யாருக்கும் தெரியாமல் மனைவியின் ஊரில் வைத்து இயற்கை முறை பிரசவம் பார்க்கமுடிவு செய்துள்ளார்.
யூடியூப் பிரசவ விபரீத முயற்சியால் இறந்த தனது மனைவியின் உடலை யாருக்கும் தெரியாமல் அவரது ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய பணிகளை மேற்கொண்டுள்ளார்.