முக்கிய செய்திகள்

நானா படேகரை என்ன செய்யப் போகிறேன் பாருங்கள்: மீண்டும் சீறியிருக்கும் நடிகை தனுஸ்ரீ

பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குநர் நானா படேகரிடமிருந்து இதுவரை எந்த நோட்டீசும் வரவில்லை என நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார்.

பல்வேரு நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கடுக்காக கூறி வரும் நடிகை தனுஸ்ரீ தத்தா, இந்தி நடிகர் நானா படேகர் மீதும் அதே புகாரைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

2008–ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற படத்தில் நடித்தபோது நானா படேகர் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை வெளியே சொல்லக்கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் மிரட்டியதுடன், தாம் குடும்பத்தினருடன் சென்றபோது தாக்கியதாகவும் தனுஸ்ரீ கூறியிருந்தார்.

“நானா படேகர் பெண்களை மதிப்பது இல்லை. சில நடிகைகளை அடித்து இருக்கிறார். என்னைப்போல் பல புதுமுக நடிகைகள் இதுபோன்ற தொல்லைகளை சந்தித்துக்கொண்டு பொறுமையாக இருக்கிறார்கள்’’ . ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் தங்கள் படங்களில் நானா படேகரை நடிக்க வைக்கக்கூடாது” என நானா படேகருக்கு எதிராக பல கருத்துகளை தனுஸ்ரீ  தெரிவித்திருந்தார்.

அத்துடன்  டிஎன்ஏ பத்திரிகைக்கு பேட்டி அளித்த தனுஸ்ரீ நானா படேகர் மீது மேலும் ஒரு புகாரைக் கூறியிருந்தார்.  தனது முதல் படமான ‘சாக்லேட்: டீப் டார்க் சீக்ரெட்ஸ்’ (2005) படத்தில் நடித்த போது, அந்த காட்சி்ககான பிரேமில் இடம்பெறாத தம்மை ஆடைகளை அவிழ்த்து விட்டு நானா படேகர் ஆடச் சொன்னதாக அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்தார். நடிகர் இர்பான் கான் அப்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் தனுஸ்ரீ தெரிவித்திருந்தார். தனுஸ்ரீயின் இந்தப் புகார்கள் குறித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நானா படேகரின் வழக்கறிஞர் கூறியிருந்தார். ஆனால், இதுவரை அப்படி எந்த நோட்டீசும் தமக்கு வரவில்லை என்றும், வந்தால் அதற்கு தாம் கொடுக்கப்போகும் பதிலடியைப் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் தனுஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

You will see What I will do in Nana Patekar Issue: Tanushree