முக்கிய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா


ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்த மத்திய அரசை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.,க்கள் 5 பேர் நேற்று ராஜினாமா செய்தனர்.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்ததில் இருந்து, ஆந்திராவுக்கு சிறப்ப அந்தஸ்து வழங்கக்கோரி ஆளும் தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்தாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இதே பிரச்னையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விவகாரத்தில், கூட்டணி கட்சியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகி, பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

ஆனால், அதிமுக போன்ற கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாமல் போனது.