முக்கிய செய்திகள்

ஜிம்பாப்வே அதிபர் முகாபே கட்சிபதவியிலிருந்து நீக்கம்..


ஜிம்பாப்வேயில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து அதிபர் முகாபே கட்சி பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து ஆளும் ஷானு பி.எப் கட்சியிலிருந்து ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஷானு பி.எப் கட்சி தலைவராக நன்காக்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன் நன்காக்வாவை முகாபே பதவி நீக்கம் செய்தார். இதனை தொடர்ந்து அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.இதனையடுத்து, கடந்த 15-ம் தேதி தலைநகர் ஹராரேவை ராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன. ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.அதிபர் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவத்தின் கண்காணிப்பில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.