ஈரான் ராணுவ அணிவகுப்பு மீது தாக்குதல்: 24 பேர் பலி

ஈரானில் ஈரான் அணி வகுப்பு, தாக்குதல், 24 பேர் பலி, ராணுவ அணிவகுப்பின் போது தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 24 பேர் பலியாயினர்.53 பேர் படுகாயமடைந்தனர்.

1980-முதல் 1988 வரை நடந்த ஈரான்-ஈராக் போர் தொடங்கியதன் நினைவாக ஈரானில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.  ஆவாஸ் நகரில் மிடுக்கான ராணுவ அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பூங்கா ஒன்றில் ராணுவ வீரர்களைப் போல சீருடை அணிந்திருந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். 

தீவிரவாதிகளின் தாக்குதலில் துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்த, ஈரான் ராணுவ வீரர்கள்  8 வீரர்களும், பொதுமக்களும் என 24 பேர் பரிதாபமாக  கொல்லப்பட்டனர்.  53 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

attack on Iranian military parade: 24 died