கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வு வங்கி தடை…

கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், கடன் அட்டைகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்ளது.தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு விவகாரத்தில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை என தகவல்

இந்தியாவில் இருக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், டிஜிட்டல் சேவை நிறுவனங்களை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. சமீபத்தில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. இந்நிலையில், கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கி, ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கவும், கிரெடிட் கார்டு வழங்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தகவல் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டை அடுத்து கோடக் மஹிந்திரா வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.