அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் இன்று நிறைவடைந்தது.
நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பா.ம.க.வுக்கு 7 தொகுதியும், பா.ஜ.கவுக்கு 5 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பாகவும்,
நாளை நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடர்பாகவும் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில்
அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, க.பாண்டியராஜன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.