முக்கிய செய்திகள்

மடை திறந்தது… மனம் நிறைந்தது: திருச்செல்வம்

Thiruchelvam Ramu Yesterday at 1:30 PMPublic

இந்த 17 வருடபயணத்தில் பல முறை ஊடகங்கள் நமது விவசாயத்தீர்வை மிகச்சிறப்பாக பதிவுசெய்திருக்கின்றன. கோடான கோடி நன்றிகள். அவைகளில், கிராமங்களில் திட்டத்தை செயல்படுத்த்தும் போது வந்த செய்திகள் மிக முக்கியமானவை. திட்டம் செயல்படும் கிராமங்கள் மட்டுமின்றி இந்த செய்திகள் அனைத்து கிராமங்களுக்கும் நம்பிக்கையை வழங்குவதாகவும், அந்த கிராமங்களிலும் இந்தமாதிரியான திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஊக்கம் தருவதாக அமையும். அந்த வகையில், நேற்று வேப்பங்குளத்தில் கண்மாய் மேடைகள் திறந்த நிகழ்வை நியூஸ் 7 மற்றும் தினமலர் சிறப்பாக பதிசெய்திருக்கின்றன. அதோடு, இந்த திட்டம் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் 30 கிராமங்களில் செயல் படுத்தியபோது இந்தியன் எஸ்பிரஸில் வந்த தலைப்பு செய்தி மற்றும் சாத்துக்குடி, மாதுளை பழங்களை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதிசெய்தபோது தி ஹிந்து பிசினெஸ் லைன் பதிவு செய்தது தங்கள் கனிவான பார்வைக்கு. நன்றி.

Agri it tiruchelvam fb status