முக்கிய செய்திகள்

நீங்க வந்ததே போதும் தலைவா… : ஸ்டாலினைப் பார்த்து நெகிழ்ந்த மக்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு சோத்துபாளையில் புயலால் சாய்ந்து நாசமான வாழைகளை பார்வையிட்ட திமுக தலைவர், விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல குப்பையன்பட்டி, ஆதனாக்கோட்டை, வலச்சேரிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் ஆய்வு செய்தார். பார்வையிட்ட பின்னர் புறப்பட்ட ஸ்டாலினிடம், அவர் வந்ததே தங்களுக்கு ஆறுதலை அளிப்பதாக உணர்ச்சி வசப்பட்டு நெகிழ்ச்சியுடன் கூறினர்.