தனியார் மயமாகிறது திருச்சி விமான நிலையம் : மத்திய அமைச்சர் தகவல்..

திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஹர்தீக் சிங் தகவல் அளித்துள்ளார்.

லக்னோ, குவாஹாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களும் தனியார்மயமாக்கப்படுகிறது.

வாரணாசி, இந்தூர், புவனேஸ்வர், ராய்ப்பூர் உள்ளிட்ட மேலும் 6 விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படும்.

அண்மையில் மத்திய நிதியமைச்சர் இந்தியாவில் 6 விமானங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன் படி திருச்சி விமான நிலையம் உள்பட 6 விமானநிலையங்களும் தனியார் மயமாகின்றன. மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்குப் பின் அதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்றார்