உள்ளாட்சி தேர்தல்:காரைக்குடி 3 வார்டில் வாக்காளர்களுக்கு குவியும் பரிசுமழை..

காரைக்குடி நகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் முன்பே வாக்காளர்களுக்கு பரிசு மழை குவிந்து வருகிறது.
தமிழகத்தில் வரும் பிப்.,19-ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்களார்களைக் கவர பல்வேறு வகையில் வேட்பாளர்கள் முனைந்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்குற்பட்ட 3-வார்டில் தேர்தல் நடைமுறைக்கு முன்பே வாக்காளர்களை கவர அவர்களுக்கு பரிசு மழைகளை வேட்பாளர்கள் அள்ளிக்கொடுத்து வருகின்றனர்.
காரைக்குடி நகராட்சிக்குற்பட்ட 3-வார்டில் மொத்த வாக்காளர்கள் 1544 பேர். இதில், ஆண் வாக்காளர்கள் -759,பெண் வாக்காளர்கள் -785 இருக்கின்றனர்.


கழனிவாசல்-செக்காலை சாலை, ஜி-பிளாக் 1,2,3. ஆறுமுகநகர் 1 முதல் 6 வீதிகள், ஐயனார் நகர் 1 முதல் 3-வது வீதிகளை உள்ளடக்கியது. இப்பகுதியில் அரசு ஊழியர்கள், நடுத்தர மக்கள்,தினக்கூலி வேலைசெய்பவர்கள் என பல தரப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியாகும்.
குறிப்பாக பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள வார்டு என்பதால் வேட்பாளர்கள் பெண்களை கவர பல வகையில் பரிசுகளை கொடுத்து அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளனர்.
இந்த 3-வார்டில் ஏற்கனவே கவுன்சிலராக இருந்த ஆடிட்டர் சந்தானம் அதிமுக சார்பில் இந்த முறை போட்டியிடுகிறார். இவர் வார்டு வாக்காளர்களை சந்தித்து இப்பகுதிக்கு கடந்தமுறை கவுன்சிலராக இருந்தபோது செய்த பணிகளைக்கூறி வாக்கு கேட்பதுடன் தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும் முன்பே பிரஸ்டீஸ் வழங்கியுள்ளார்.

இதுபோல் திமுக சார்பில் போட்டியிட உள்ள அன்னை மைக்கேல் தன் பங்குகிற்கு காட்பாக்ஸ் கொடுத்து திமுக ஆட்சியின் சாதனைகளைக் கூறி மேலும் நான் கவுன்சிலராக வந்தால் வார்டிக்கு பல திட்டங்களை செயல்படுத்துவேன் எனக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிற்பிற்கு முன்பே வாக்காளர்களைக் கவர பல்வேறு முயற்சி எடுக்கும் இவர்கள் தேர்தல் நெருங்க,நெருங்க என்ன வெல்லாம் செய்வார்களோ…
மகிழ்ச்சி வெள்ளத்தில் காரைக்குடி நகராட்சி 3-வார்டு மக்கள்

செய்தி &படங்கள்
சிங்தேவ்
98409 04787
அன்பு நண்பர்களே சிவகங்கை மாவட்ட உள்ளாட்சி தேர்தல் குறித்து தகவல்களை செய்தியாக்கி வெளியிட விரும்பும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள்,சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் மேல் கண்ட அலைபேசிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
உங்களோடு நாங்கள்..