காரைக்குடியில் ஒரே நாளில் 70 க்கும் மேற்பட்டோர் கண் மற்றும் உடல்,உடல் உறுப்பு தானம் செய்து சாதனை…

தமிழகத்திலேயே அதிகமான அளவில் காரைக்குடியில் 70 க்கும் மேற்பட்டோர் தங்கள் கண் மற்றும் உடல்,உடல் உறுப்பு தானம் செய்தனர்

காரைக்குடி குளோபல் மிஷின் ஹாஸ்பிடல் மற்றும் காரைக்குடி ஊற்றுக்கள் அமைப்பும் இணைந்து சமூக ஆர்வலர் ஜான் பாலின் இரண்டாம் ஆண்டு நினைவு மாபெரும் கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமை கோவிலூர் கானல் கண் மருத்துவமனை உதவியோடு மிகச் சிறப்பாக நடத்தினர் .நூற்றுக்கணக்கான மக்கள் பயன்பட்டனர். இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக இதுவரை தமிழகத்தில் இல்லாத அளவில் கண் மற்றும் உடல், உடல் உறுப்பு தானத்தை 70 க்கும் மேற்பட்டோர் செய்தனர்.
உடல் உறுப்பு மற்றும் கண் தானம் செய்தவர்களுக்கு ராமநாபுரம் சரக டிஐஜி துரை அவர்கள் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். சமூக ஆர்வாலர் டாக்டர் பிரபு சிறப்புரையாற்றினார்.


நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளரும்,குளோபல் மிசின் மருத்துவமனையின் தலைமை மருததுவர் டாக்டர் குமரேசன் கூறும்போது:-
எங்களுடைய டைம் ஹல்த்கேர் பவுண்டேஷன் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் கண் மற்றும் உடல் உறுப்பு தானத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ,முதலில் மருத்துவராகிய நாங்களும், எங்கள் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் விருப்பம் உள்ள ஊழியர்களிடம் பெற்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இருக்கும் போது
சமூக ஆர்வலர் ஜான் பாலின் இரண்டாம் ஆண்டு நினைவு அனுசரிக்கும் வகையில் இன்றே இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் உடல் உறுப்பு தானத்தை ஏற்பாடு செய்தோம். நாங்கள் எதிர்பாக்காத அளவில் 70 க்கும் மேற்பட்டோர் தானம் செய்தனர். எங்களுடன் உறுதுணையாக இணைந்து செய்ல்பட்ட காரைக்குடி ஊற்றுக்கள் மற்றும் சமுக ஆர்வாலர்களுக்கும் கண் சிகிச்சை- முகாமை நடத்திய கோவிலுர் காணல் கண் மருத்துவமனைக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கண் மற்றும் உடல் உறுப்பு தானம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது. தமிழக அரசு அதற்கான வெப்சைட் உறுவாக்கியுள்ளது. அதில் நாம் உறுப்புகளை தானம்செய்ய போவதை பதிவு செய்து கொள்ளலாம். நாம் இறந்த பிறகு உடல் உறுப்பு தானத்திற்கான பிரத்யோக அலைபேசி எண்ணிற்கு உறவினர்கள்
தொடர்பு கொண்டால் அவர்களே உங்கள் இருப்பிடத்திற்கே வந்து பெற்றுக் கொள்வார்கள்.
முதலில் மருத்துவர்களாகிய நாங்கள் உடல் உறுப்பு தானம் செய்தால் தான் பொதுமக்களும் ஆர்வமாக கலந்து கொள்வார்கள் என நினைத்து இந்த விழிப்புணர்வு முகாமை நடத்தினோம் நாங்கள் எதிர்பாரத வகையில் மருத்துவமனை ஊழியர்கள் தவிர பொதுமக்களும் அதிக அளவில் உடல் உறுப்பு தானம் செய்தது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்கள் அழைப்பை ஏற்று இராமநாதபுரம் சரக டிஐஜி துறை அவர்கள், காரைக்குடி டிஎஸ்பி பிரக்காஷ் அவர்கள் கலந்து கொண்டதற்கு நன்றி என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நூற்றுக்கனக்கான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
கண் மற்றும் உடல் உறுப்புதான விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் சாதனை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்