யார் இந்த மைத்ரேயன்?: முகநூல் பேச்சு

அதிமுகவின் டாக்டர். மைத்ரேயன், வடகலை ஐயங்காரான இவர் தனது சிறு வயது முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிதீவிர தொண்டர்.

1995-97 தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராகவும், 1997-99 வரை துணை தலைவராகவும், மத்தியில் பாஜக ஆளத் தொடங்கிய காலமான 1999-2000 வரை தமிழக பாஜகவுக்கு தலைவராக இருந்த அவர், திடீரென ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்தார்.

 

பொதுவாக கட்சியின் மாவட்ட பொறுப்புகளில் இருக்கும் ஒருவரே கட்சி தாவினால், அக்கட்சியின் சக நிர்வாகிகளால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவது வழக்கமான தமிழக அரசியலில், பாஜகவின் தமிழக தலைவரான மைத்ரேயேனின் கட்சி தாவலை அப்படி யாரும் விமர்சிக்கவில்லை.

 

ஆர்.எஸ்.எஸ்ஸே அவரை அதிமுகவிற்கு அனுப்பியது என அரசியல் பார்வையாளர்கள் பலர் அப்போதே சந்தேகித்தனர்.

 

அவர் அதிமுகவில் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே அக்கட்சியின் சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக்கப்பட்டார். (இன்றளவும் அவர் அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராக தொடர்கிறார்). அதிமுகவின் பாஜ சம்பந்தபட்ட டெல்லி விவகாரங்களுக்கு இன்றைக்கும் அவர் தான் லாபியிஸ்ட்.

 

அந்த டாக்டர் மைத்ரேயன், இன்று பன்னீர் பக்கத்தில் முதல் ஆளாக துண்டு போட்டு அமர்ந்திருக்கிறார்.

 

இப்போது பன்னீர் செல்வத்தை யார் இயக்குகிறார்கள் என்பது உங்கள் முடிவு !!

 

நன்றி: VP Sheikh Sheikh

 

– நன்றி தீக்கதிர்