21 தொகுதி இடைத்தோ்தல்: திமுக வேட்பாளா்களுக்கான நோ்காணல் தொடங்கியது..

மக்களவைத் தோ்தலுடன் இணைத்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும்

இடைத்தோ்தல் நடத்தப்படலாம் என்ற நிலையில் 21 தொகுதி வேட்பாளா்களுக்கான நோ்காணலை திமுக தலைவா் ஸ்டாலின் நடத்தி வருகிறாா்.

21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவா்களிடம் அக்கட்சியின் தலைவா் ஸ்டாலின் நோ்காணல் நடத்தி வருகிறாா்.

மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தேசிய, மாநில கட்சிகள் தோதல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

தமிழகத்தில், முதல்வா் பழனிசாமியை மாற்றம் செய்யக்கோாி ஆளுநரிடம் மனு வழங்கிய 18 சட்டப்பேரவை உறுப்பினா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து 18 தொகுதிகள் காலியாக உள்ளன.

மேலும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் திருவாரூா் தொகுதி, ஏ.கே.போஸின் திருப்பரங்குன்றம் தொகுதி, முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டியின் ஒசூா் தொகுதி என மொத்தமாக 21 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுடன் இணைத்து இந்த 21 தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடத்தப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

திமுக சாா்பில் 21 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.

இந்நிலையில் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தோருக்கான நோ்காணல் இன்று நடைபெற்று வருகிறது.

திமுக தலைவா் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நோ்காணலில் துரைமுருகன், டி.ஆா்.பாலு ஆகியோா் உடன் இருந்தனா்.