தெற்காசிய நாடுகளில் பறவைக்காய்ச்சல் காரணமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு சவுதி அரேபியாவில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கால்நடை சுகாதாரத்துக்கான உலகளாவிய அமைப்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 950 கோழிகளில் 9 கோழிகள் பறவைக்காய்ச்சலால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அதன் சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும், கோழிகள், கோழி இறைச்சிகள், மற்றும் முட்டைகளுக்கு தற்காலிகமாக தடை விதித்து சவுதி அரேபிய வேளாண்துறை அமைச்சகம் வியாழனன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.