2.32 லட்சம் கன அடி நீர் சீறிப்பாய்வதால் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 50 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் ஈரோடு மாவட்டம் பவானி வரும்போது, அங்கு பவானி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர், கரூர் அடுத்த திருமுக்கூடலூர் என்ற இடத்தில் வரும்போது, காவிரியில் அமராவதியில் இருந்து வரும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும் சேர்கிறது. இது தவிர நொய்யல் அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த சாயக்கழிவுகளும் இப்போது காவிரியில் விடப்பட்டு உள்ளது. இதனால் காவிரியில் நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு சுமார் 2,32,900 லட்சம் கனஅடி வீதம் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.
காவிரி கரூர் மாவட்டத்தில் நுழையும் இடமான தவிட்டுபாளையம், நஞ்சை புகழூர் ஆகிய காவிரி கரையோரம் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. சுமார் 300 வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. 271 பேர் அந்த பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி வெள்ளம் மேலமாயனூர், ரெங்கநாதபுரம் உள்பட பல கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் புகுந்தது. இந்த பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மரவள்ளி கிழங்கு, வாழை, வெற்றிலை , சோளம் உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வயல்வெளிகளில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது.
திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து காவிரியில் வரும் வெள்ளம் கொள்ளிடத்தில் பெரும்பகுதி அனுப்பப்படுகிறது. கொள்ளிடத்தில் வினாடிக்கு 1,65 லட்சம் கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. மீதம் உள்ள தண்ணீர் காவிரியில் விடப்படுகிறது. முக்கொம்பில் இருந்து காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வரை சென்றால் மட்டுமே சேதம் ஏற்படாது. தற்போது 67ஆயிரம் கனஅடி செல்வதால், கல்லணை அருகே உள்ள கவுத்தரசநல்லூருக்கும் உத்தமர்சீலிக்கும் இடையே காவிரி கரைபுரண்டு இடது புறத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் போய் கலக்கிறது. இதனால் அந்த வழியாக கல்லணை செல்லும் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ரங்கம் அம்மாமண்டபம், முசிறி பரிசல்துறை ரோடு, அக்ரகாரம் உள்ளிட்ட அனைத்து படித்துறைகளுக்கும் செல்லும் சாலைகள் மூடப்பட்டு உள்ளன.
கல்லணை அருகே கிளிக்கூடு, கவுத்தரசநல்லூர், உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்சோலை உள்பட பல கிராமங்களில் வெள்ளம் வயல்களுக்குள் புகுந்து உள்ளது. சுமார் 500 ஏக்கர் வழை, கரும்பு பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. கரூர், திருச்சி மாவட்டங்களில்காவிரி, கொள்ளிடம் ஆற்றுக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியம் ஊராட்சி தட்டுமால் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பள்ளிகள், சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
திருவையாறுஅடுத்தஆச்சனூரில் கொள்ளிடம் கரைபுரண்டு ஊருக்குள் அரை கி.மீ. தூரம் புகுந்தது. அந்த பகுதியில் உள்ள வாழைத்தோட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. தஞ்சை, அரியலூர் மாவட்டங்களுக்கு இடையே உள்ள அணைக்கரைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 94,977 கனஅடி தண்ணீர் கொள்ளிடத்தில் வருவதால், அந்த பாலத்தில் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. அரியலூர் மாவட்டம் தூத்தூர், முட்டுவாஞ்சேரி, கீழவரப்பன் குறிச்சி, மேலராமநல்லூர், வைப்பூர் உள்ளிட்ட பல கிராமங்களில் கொள்ளிடம் வெள்ளம் புகுந்தது. இந்த பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகள், வயல்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நாகை மாவட்டம் நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல் ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முதலைமேடு திட்டில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் பாதுகாப்புடன் கரைக்கு கொண்டு வரப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 2.32 லட்சம் கன அடி நீர் சீறிப்பாய்வதால் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 50 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் ஈரோடு மாவட்டம் பவானி வரும்போது, அங்கு பவானி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர், கரூர் அடுத்த திருமுக்கூடலூர் என்ற இடத்தில் வரும்போது, காவிரியில் அமராவதியில் இருந்து வரும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும் சேர்கிறது. இது தவிர நொய்யல் அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த சாயக்கழிவுகளும் இப்போது காவிரியில் விடப்பட்டு உள்ளது. இதனால் காவிரியில் இன்று காலை வினாடிக்கு சுமார் 2,32,900 லட்சம் கனஅடி வீதம் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.
காவிரி கரூர் மாவட்டத்தில் நுழையும் இடமான தவிட்டுபாளையம், நஞ்சை புகழூர் ஆகிய காவிரி கரையோரம் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. சுமார் 300 வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. 271 பேர் அந்த பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி வெள்ளம் மேலமாயனூர், ரெங்கநாதபுரம் உள்பட பல கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் புகுந்தது. இந்த பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மரவள்ளி கிழங்கு, வாழை, வெற்றிலை , சோளம் உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வயல்வெளிகளில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது.
திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து காவிரியில் வரும் வெள்ளம் கொள்ளிடத்தில் பெரும்பகுதி அனுப்பப்படுகிறது. கொள்ளிடத்தில் வினாடிக்கு 1,65 லட்சம் கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. மீதம் உள்ள தண்ணீர் காவிரியில் விடப்படுகிறது. முக்கொம்பில் இருந்து காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வரை சென்றால் மட்டுமே சேதம் ஏற்படாது. தற்போது 67ஆயிரம் கனஅடி செல்வதால், கல்லணை அருகே உள்ள கவுத்தரசநல்லூருக்கும் உத்தமர்சீலிக்கும் இடையே காவிரி கரைபுரண்டு இடது புறத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் போய் கலக்கிறது. இதனால் அந்த வழியாக கல்லணை செல்லும் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ரங்கம் அம்மாமண்டபம், முசிறி பரிசல்துறை ரோடு, அக்ரகாரம் உள்ளிட்ட அனைத்து படித்துறைகளுக்கும் செல்லும் சாலைகள் மூடப்பட்டு உள்ளன.
கல்லணை அருகே கிளிக்கூடு, கவுத்தரசநல்லூர், உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்சோலை உள்பட பல கிராமங்களில் வெள்ளம் வயல்களுக்குள் புகுந்து உள்ளது. சுமார் 500 ஏக்கர் வழை, கரும்பு பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. கரூர், திருச்சி மாவட்டங்களில்காவிரி, கொள்ளிடம் ஆற்றுக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியம் ஊராட்சி தட்டுமால் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பள்ளிகள், சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
திருவையாறுஅடுத்தஆச்சனூரில் கொள்ளிடம் கரைபுரண்டு ஊருக்குள் அரை கி.மீ. தூரம் புகுந்தது. அந்த பகுதியில் உள்ள வாழைத்தோட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. தஞ்சை, அரியலூர் மாவட்டங்களுக்கு இடையே உள்ள அணைக்கரைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 94,977 கனஅடி தண்ணீர் கொள்ளிடத்தில் வருவதால், அந்த பாலத்தில் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. அரியலூர் மாவட்டம் தூத்தூர், முட்டுவாஞ்சேரி, கீழவரப்பன் குறிச்சி, மேலராமநல்லூர், வைப்பூர் உள்ளிட்ட பல கிராமங்களில் கொள்ளிடம் வெள்ளம் புகுந்தது. இந்த பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகள், வயல்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நாகை மாவட்டம் நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல் ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முதலைமேடு திட்டில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் பாதுகாப்புடன் கரைக்கு கொண்டு வரப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பாலத்தை சீரமைக்க வேண்டும்: ஸ்டாலின்… இடித்துத் தள்ளுவோம்: அமைச்சர்
திருச்சி அருகே இடிந்துவிழும் நிலையில் உள்ள கொள்ளிடம் இரும்புப் பாலத்தை சீரமைக்குமாறு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், வெள்ளம் நின்ற பின்னர் அந்தப் பாலம் இடித்துத் தள்ளப்படும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மிகப்பழமையான இரும்புப்பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1924 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம், 1928 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில், உத்தரவாத ஆண்டுகள் முடிவடைந்து பாலம் வலுவிழந்ததால் அருகே புதிய பாலம் கட்டப்பட்டு, கடந்த 2016 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கின் வேகத்தாலும், மணல் அரிப்பினாலும் பாலத்தின் 18 ஆம் தூணில் விரிசல் ஏற்பட்டது. நீரின் வேகம் அதிகரித்த நிலையில், 21 மற்றும் 22 ஆம் தூண்களும் சேதமடைந்து பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்தப் பாலத்தை சீரமைக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், வெள்ளம் வடிந்த பின்னர் சேதமடைந்துள்ள கொள்ளிடம் இரும்புப் பாலம் இடித்து அகற்றப்படும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
Cauvery Flood increasesd up to 2.32 Cubic feet