இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் : இந்திய அணி அபார வெற்றி


இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி நாட்டிங்காமில் நடைபெற்ற 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 டெஸ்ட் கொண்ட போட்டியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

முதல் இன்னிங்சில் இந்தியா 329, இங்கிலாந்து 161 ரன்கள் எடுத்தன. இந்திய அணி 2வது இன்னிங்சில் 352 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தது. 521 ரன்கள் இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி 4ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. ரஷித் (30), ஆண்டர்சன் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. போட்டி துவங்கிய 10வது நிமிடத்தில் அஷ்வின் ‘சுழலில்’ ஆண்டர்சன் (11) சிக்க, இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார். இருப்பினும், இந்திய அணி தொடரில் 1-2 என பின்தங்கி உள்ளது. நான்காவது டெஸ்ட் வரும் 30ல் சவுத்தாம்ப்டனில் துவங்க உள்ளது.


 

ஆசியப் போட்டி துப்பாக்கி சுடுதல் : மகளிர் 25 மீ பிரிவில் இந்தியாவின் சர்னோபட்டுக்கு தங்கம்..

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து; தமிழக அரசு ஆழ்ந்து உறங்குகிறது: ராமதாஸ் கண்டனம்..

Recent Posts