சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..


சத்துணவு முட்டை டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரூ.220 கோடி மதிப்புள்ள சத்துணவு முட்டை டெண்டருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பதில்மனு தாக்கல் செய்ய 14-ம் தேதி வரை தமிழக அரசு அவகாசம் கேட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் செப்.20-ம் தேதி வரை டெண்டருக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

முன்னதாக சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைக்கான டெண்டரை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோழிப்பண்ணைகள் சார்பில் நேற்று வழக்கு தொடரப்பட்டது.

சத்துணவு திட்ட முட்டை விநியோகத்துக்கான டெண்டர் இன்று முடிவு செய்யப்பட இருந்த நிலையில், 4 கோழிப் பண்ணைகள் உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சத்துணவுக்கு முட்டை வழங்கப்படும் டெண்டர் குறித்து இன்று இறுதி முடிவு செய்யப்பட இருந்தது. இந்நிலையில் 4 கோழிப் பண்ணைகள் உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சத்துணவு முட்டை விநியோக டெண்டர் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


 

மெரினா நோக்கி அழகிரியின் அமைதிப் பேரணி தொடங்கியது..

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி : ஸ்டாலின் கண்டனம்..

Recent Posts