மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி-20 போட்டி: இந்தியா வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. நிகோலஸ் பூரன் (Nicolas Pooran) 53 ரன்களும், டாரன் பிராவோ (Darren Bravo) 43 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. ரோஹித் சர்மா 4 ரன்களும்,ராகுல் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரிஷப் பந்த் 58 ரன்களும், ஷிகர் தவான் 92 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். வெற்றிக்கு ஒரு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் சமநிலையில் இருந்தது.

கடைசி பந்தில் பாண்டே வெற்றிக்கான ஒரு ரன்னை எடுத்தார். இதன் மூலம் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

சத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதிவு

ஆசிரியை குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது..

Recent Posts