கஜா புயல் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல சரக்கு ரயிலில் கட்டணம் கிடையாது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
கஜா புயலின் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ள மக்கள் போதிய உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்றி தவித்து கொண்டிருக்கின்றனர்.
லட்சக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், அவற்றைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பல இடங்களில் மின்சாரம் இன்றி இருளில் தவித்து வருகின்றனர். மாநில அரசும், தன்னார்வ குழுக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.
தங்களின் 10 ஆண்டுகால உழைப்பு முற்றிலும் வீணாகிப் போனதாக மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநில மக்களும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
இதனிடையே புயல் பாதிப்பு நிவாரணப் பொருட்களை சரக்கு ரயிலில் கொண்டு செல்ல கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று கஜா புயல் பாதிப்பு நிவாரணப் பொருட்களை டிசம்பர் 10ம் தேதி வரை இலவசமாக கொண்டு செல்லாம் என்றும் அதற்கு கட்டணம் எதுவும் இல்லை என்றும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது