ஸ்டெர்லைட்டை விவகாரம் : தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தையடுத்து, ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இதுகுறித்து முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இருதினங்களுக்கு முன், இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை தனித்தனியாக மூடி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், உறுப்பினர் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்கயிருக்கின்றனர்.

.இதனால் இன்று ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் மீண்டும் பரபரப்பை அடைந்துள்ளது.