மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை : ரஜினி அறிவிப்பிற்கு அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து..

மக்களவைத் தேர்தலில் ரஜினி போட்டியிடாதது அவரது கொள்கை எனவும் அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் ஜெயக்குமார்  கூறியுள்ளார்.

சென்னை வேளச்சேரியில் அரசு சார்பில், தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதன் தொடக்க நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவுடன் அதிமுக நடத்திய பேச்சுவார்த்தை அரசு ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ இருக்கலாம் என்றார்.

கூட்டணி குறித்து கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். கூட்டணி பேச்சுவார்த்தை,

தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம், அறிக்கை ஆகியவற்றுக்குத் தனித் தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக தலைமையில் அமைக்கும் மெகா கூட்டணிக்கும், திமுக தலைமையிலான கூட்டணிக்கும் தான் போட்டி என அவர் குறிப்பிட்டார்.

ரஜினி மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது அவரது கொள்கை எனவும், அதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

 

 

காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்

புல்வாமா தாக்குதல்: ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை..

Recent Posts