அண்மையில் அசுரன் திரைப்படம் பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அசுரன் படம் அல்ல பாடம் என பாராட்டியிருந்தார்.
இந்த டிவிட்க்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட் பக்கத்தில் முரசொலி அலுவலகம் இருக்கும் பஞ்சமி நிலம் ஸ்டாலின் திருப்பி ஒப்படைப்பார என டிவிட் செய்திருந்தார்
இந்த பதிவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மறுத்ததுடன் அதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.
மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.!
அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட
பட்டா- மனை
நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!
அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?
என பதிவிட்டுள்ளார்