தமிழக காவல்துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிப்போர்ட்டர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Reporter
காலியிடங்கள்: 29
சம்பளம்: மாதம் ரூ.36,200 – 1,14,800
வயதுவரம்பு: 19 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு திறன் தேர்வில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் தட்டச்சு திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களில் சுயசான்றொப்பம் செய்த நகல்கள் மற்றும் அதனுடன் ஒப்பதல் அட்டையை இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2nd Floor, Old Coastal Security, Group Building,DGP Office Complex,Mylapore, Chennai-4.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpolice.gov.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர் கடைசி தேதி: 31.03.2020