இந்தியாவில் 96,169 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 5,242 பேருக்கு தொற்று…

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதும் முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 55 நாட்கள் ஆகியுள்ள போதிலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 5242-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 157- பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96169 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 36824- பேர் குணமடைந்துள்ள நிலையில், 3029 பேர் பலியாகியுள்ளனர்.

ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 36,824 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,242 பேரருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 157 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநிலம் – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
மஹாராஷ்டிரா – 33,053
குஜராத் – 11,379
தமிழகம் – 11,224
டில்லி – 10,054
ராஜஸ்தான் – 5,202
ம.பி.,-4,977
உ.பி.,-4,259
மே.வங்கம்-2,677

திருவண்ணாமலையில் ஐசிஎம்ஆர் மருத்துவ குழு ஆய்வு..

சி.பி.எஸ்.இ., பொது தேர்வு கால அட்டவணை இன்று அறிவிப்பு..

Recent Posts