அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் நிறுத்தம்..

தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகளை பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் தொடங்கிய நிலையில் தற்போது அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல், பொறியியல் படிப்புகளில் அரியர் பாடங்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.
இது பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விதிகளுக்கு முரணானது என இந்த அமைப்புகள் தெரிவித்தன.
மேலும் இது தொடர்பாக வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

மேலும், கட்டணம் செலுத்தியுள்ள அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்கிற அறிவிப்பை திரும்பப்பெற்று கல்லூரி திறக்கப்பட்ட பின்பு அவர்களுக்கு தேர்வுகளை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

மத்திய அரசின் வழக்கறிஞர் என்று போலி ஆவணம் பா.ஜ.க. நிர்வாகி மீது 4 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு..

கிராம ஊராட்சி சாலை மேம்பாட்டு பணிக்களுக்கான டெண்டர் ரத்து : அதிமுக அரசுக்கு சம்மட்டி அடி :மு.க.ஸ்டாலின் அறிக்கை..

Recent Posts