காரைக்குடியில் அப்துல்கலாமின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பூப்பந்து விளையாட்டு போட்டி..

காரைக்குடியில் அப்துல்கலாமின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பூப்பந்து விளையாட்டு போட்டியில் வென்றவர்கள் பரிசு கோப்பைகளுடன்

முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவுதினத்தினை முன்னிட்டும் டோக்கியோ ஓலிம்பிக் 2021ல் இந்திய வீரர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக காரைக்குடியில் பூப்பந்து விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.


இப்போட்டியினை சிவகங்கை நேருயுவகேந்திராவில் இணைப்பு பெற்ற மன்றங்களான அக்னிசிறகுகள் இளையோர் மன்றம், வள்ளல் அழகப்பர் இளையோர் மன்றம், தோள்கொடுதோழா இளையோர் மன்றம் மற்றும் அகஸ்டின் இளையோர் மன்றத்தின் சார்பில் இணைந்து நடத்தினர்.


போட்டியில் தலா 3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்றன. போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.


விழாவில் திரு பிரவீன்குமார் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் சிவகங்கை தலைமை வகித்தார். திரு சிவகுமார் நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரி அழகப்பா பல்கலைக்கழகம் கேடயம் வழங்கினார், திரு சந்திரபோஸ் அவர்கள் தலைவர் அக்னிசிறகுகள் மக்கள் நலச்சங்கம் வீரர்களை பாராட்டி பேசினார். இப்போட்டியினை ப்ரண்ட் அகடமியினர் சிறப்பாக நடத்திக்கொடுத்தனர்.

செய்தி & படங்கள்
அருண் யாமிழன்

அலாஸ்கா தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 8.2 ஆக பதிவு..

திரைப்பாடலாசிரியர் சினேகன் திருமணம்: கமல்,பாரதிராஜா,பாக்கியராஜ் பங்கேற்பு..

Recent Posts