மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக வன்முறை தொடர்ந்து வரும் நிலையில் வன்முறை தொடர்பாக ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு விவகாரம், அமைதி திரும்ப எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, நிவாரண முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட புதிய நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விரிவான அறிக்கையின் அடைப்படையில் தான் வழக்கில் விசாரணையை நடத்த முடியும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.