பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள் என்ற பெயரில் இராமேஸ்வரத்திலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டுவருகிறார். பாதயாத்திரையின் ஒரு பகுதியாக நேற்று மாலை காரைக்குடி அருகே கோவிலுார் வந்தடைந்தார் அண்ணாமலை. அவருக்கு பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் காரைக்குடி டிடி நகரில் திறந்த வேனில் உரையாற்றினார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் சட்டவிரோதமாக நடந்து கொண்தாக குற்றம் சாட்டப்பட்டவர்.சிதம்பரம் மனைவி,மகன் கார்த்தி ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஓரே குடும்பத்தில் 3 பேரும் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் சிவகங்கையில் தான். சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா கொடுத்தவர்கள் ஆட்சிக்கு வரலாமா?, ப.சிதம்பரம் குடும்பம் பிரதமர் மோடியின் கால்துாசிக்கு சமம் என்று பேசினார்.
திமுக நடைபயணம் தொடங்கியிருந்தால் “என் மகன்,என்பேரன் ”என்று நடத்தியிருப்பார்கள்ஆட்சிக்கு வந்த 27 மாதங்களில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிருப்பதாக திமுக அமைச்சரே கூறியுள்ளார்.
தமிழ் மொழியை,அதன் தொன்மையை, தமிழர்களின் பாரம்பரிய சிறப்புகளை உலகெங்கும் எடுத்துக் கூறி தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறார் பிரதமர் மோடி. காசியில் தமிழ் சங்கமம் நடத்தினார். செட்டிநாட்டு பகுதியினருக்கு சொந்தமான காசியில் இருந்த சத்திரத்து இடத்தை அப்போதைய ஆட்சியினரின் ஆக்கிரமிப்பை அகற்றி சத்திரத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றவில்லை சிவகங்கை பாராளுமன்ற தொகுதியிலிருந்து பாஜக வெற்றிபெற்றால் சிவகங்கைக்கு தேவையானவற்றை பெற டெல்லியில் குரல் கொடுப்போம் என்று பேசினார்.
கூட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா,மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் தலைவர் சோழன் பழனிசாமி, மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி,மாநில விவசாயிகள் பிரிவு துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாநில இளைஞரணி துணை செயலாளர் பாண்டித்துரை,மாவட்ட துணை தலைவர் நாராயணன்,மாவட்ட பொதுசெயலாளர் மாநில பொதுக்குழு உறுப்பினர் காசிராஜா,இதர பிற்படுத்தப்பட்டோர் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ சேதுபதி,மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம்.
மாவட்ட பொது செயலாளர் நாகராஜன்,உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் துரை பாண்டியன்,மாவட்ட தலைவர் பூப்பாண்டி, காரைக்குடி நகர வடக்கு தலைவர் பாண்டியன், தெற்கு தலைவர் மலைக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்