மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவையில் ஒப்புதல் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
1996ம் ஆண்டு முதல் முறையாக தேவேகவுடா தலைமையிலான அரசில் இம்மசோதா கொண்டுவரப்பட்டது, எனினும் மக்களவையில் தோல்வி அடைந்தது
1998ல் வாஜ்பாய் அரசில் இம்மசோதா மீண்டும் விவாதிக்கப்பட்டது. 1999, 2002, 2003 ஆண்டுகளிலும் வாஜ்பாய் அரசில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் நிறைவேறவில்லை
2008ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசில் மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது
2009ல் நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ய, 2010ம் ஆண்டு ஒன்றிய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது
2010ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி மாநிலங்களவையில் 186-1 என்ற வாக்கில் இம்மசோதா நிறைவேறியது. எனினும், மக்களவையில் மசோதா எடுத்துக்கொள்ளவில்லை
13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்போது இம்மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ளது