காரைக்கால், திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக மதுரைக்கு புதிய ரயில் இயக்க காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை…

காரைக்குடி அக்-02, காரைக்காலில் இருந்து நாகூர், நாகபட்டணம், திருவாரூர், திருத்துறைபூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரைக்கு புதிய பயணிகள் இரயில் இயக்க காரைக்குடி தொழில் வணிகக் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி தொழில் வணிகக்கழகம் சார்பில் அதன் தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் எஸ்.கண்ணப்பன் இருவரும் இந்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்க்கு அனுப்பிய கோரிக்கையில்,

தென் கிழக்குப் பகுதி(ECR)-யில் உள்ள சாதாரண, சிறு,குறு, வியாபாரிகளுக்கும், பட்டுக்கோட்டை,பேராவூரணி தென்னை விவாசாயிகள் பயணடையவும்,கட்டட கட்டுமான தொழில் செய்வோர்கள், சாலையோரம் சிற்றுார்,பேரூர் நகரங்களில் உள்ள வியாபாரிகள் அனைத்துப் பொருள்களையும் கொள்முதல் செய்யும் நகரம் மதுரைதான்.

அத்துடன் மேல்படிப்பிற்கும்,மருத்துவ சிகிச்சைக்கும், நீதிமன்ற வழக்குகளுக்கு உயர்நீதிமன்றம் மற்றும் கோவை,நாகர்கோயில், கேரளா பகுதிக்கு இரயில் பயணிப்பவர்களும் மதுரை சென்று தான் போய் வருகின்றனர். மேலும் இந்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை,விமானப் பயணம் செய்வோர்கள் இந்தப் பகுதியிலிருந்து செல்வோருக்கு இரயில் வசதிகள் இதுவரை கிடையாது.

எனவே காரைக்கால்,நாகூர்,நாகப்பட்டணம்,திருவாரூர்,திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை,பேராவூரணி, அறந்தாங்கி,காரைக்குடி, சிவகங்கை,மானமதுரை வழியில் மதுரைக்கு புதிய பயணிகள் இரயில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 11.30 மணிக்கு மதுரை சென்றடையவும்,மறுமார்க்கமாக மதுரையிலிருந்து பிற்பகல் 4.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11-50க்கு காரைக்கால் சேரும்படி இருப்பது மிக அவசிய மாகிறது,

இந்தரயில் முத்துப்பேட்டை, அதிராம்பட்டணம், தில்லைவிளாகம், பேராவூரணி, அறந்தாங்கி, புதுவயல் கண்டணுார், தேவகோட்டை ரஸ்தா, கல்லல் போன்ற ஊர்களில் நின்று செல்லும் படியாக இரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி & படங்கள்
சிங் தேவ்

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை” குறுங்காவியம்!

காரைக்குடியில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி :150-க்கும் மேற்பட்ட பாடிபில்டர்ஸ் பங்கேற்பு…

Recent Posts