மின்சாரம் கட்டண விலை உயர்வுக்கு அதானி நிலக்கரி விலையை உயர்வே காரணம் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு..

அதானி நிறுவனத்தின் முறைகேட்டால் நாட்டு மக்கள் கூடுதல் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
டெல்லியில் நடைபெற்ற செய்சியாளர் சந்திப்பின் போது அதானி நிலக்கரி விலையை உயர்த்தியது தான் மின்சாரம் கட்டண விலை உயர்வுக்கு காரணம் என்று ஆதாரத்துடன் தெரிவித்தார் ராகுல்காந்தி.
அதானி நிறுவனம் இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி வாங்கி இந்திய அனல் மின் நிலையங்களுக்கு இருமடங்கு விலையை உயர்த்தி ஏழைகளின் பணத்தை கொள்ளை யடித்ததுடன் மின்கட்டணம் உயர்வுக்கும் இதுவே காரணம் என்றார் ராகுல்காந்தி.

இந்தியாவில் நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றின் மூலமாக 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறை கேடு நடந்திருப்பதாகவும் இதன் பின்னணியில் அதானி இருப்பதாகவும் லண்டனில் இருந்து வெளியாகும் பினான்சியல் டைம்ஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு அதானி மீது பிரதமர் நரேந்திர மோடி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

அப்பலோ மருத்துவமனை சார்பில் “உலக விபத்து காய தினம்” : காரைக்குடியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி …

காஸாவில் மனிதாபிமான போர்நிறுத்த அழைப்பு : ஐ.நா.சபையில் ரஷ்யா தீர்மானம் நிராகரிப்பு..

Recent Posts