ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: இந்தியாவிற்கு 3 வெள்ளி,2 வெண்கலப் பதக்கம்..

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
இன்று நடைபெற்ற ஆசிய போட்டிகளில் 3 வெள்ளி,2 வெண்கலப் பதக்கம் பதக்கத்தை வென்றது இந்தியா.
ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 3 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகளுக்கான துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றது இந்தியா ரமிதா, அஷி சோக்ஸி, மெகுலி ஜோடி 1886 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றது.


ஆசிய விளையாட்டு போட்டியில் ஹாக்கியில் உஸ்பெகிஸ்தானை 16-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இந்திய வீரர்கள் லலித், அமித், வருண் ஆகியோர் ஹாட்ரிக் கோல்கள் அடித்தனர்.