செட்டிநாடு குமாராணி டாக்டர் மீனா முத்தையா மருத்துவமனை வழிதடத்தில் நகர பேருந்து : கூட்டுறவுத் தறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்..

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் செட்டிநாடு பகுதியில் குமாரராணி டாக்டர் மீனா முத்தையா தாய்சேய் மற்றும் பொதுநல மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை கானாடுகாத்தான் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்கி வருகிறது. மருத்துவமனைக்கு பொதுமக்கள், நோய்யுற்றவர்கள் எளிதில் செல்ல போதிய வாகன வசதியில்லாமல் இருந்து வந்தது.

குமாரராணி டாக்டர் மீனா முத்தையா தாய்சேய் மற்றும் பொது மருத்துவமனை வழித்தடத்தில் நகர அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தினர்.


பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குமாராணி டாக்டர் மீனா முத்தையா மருத்துவமனை வழியாக நேற்று நகர பேருந்து சேவை தொடங்கியது. பேருந்து சேவையை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.


இந்நிகழ்வில் திமுக பொதுக்குழு உறுப்பினர் கே எஸ் ரவி , சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த், கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கார்த்திக் சோலை , மூன் ஸ்டார் லேனா மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காரைக்குடியிலிருந்து இராயவரம் செல்லும் 1A நகரப்பேருந்து மருத்துவமனை வழித்தடத்தில் வந்து செல்வதை பொதுமக்கள் வரவேற்றனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்