அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை திருக்குவளையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்டது காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் 31,000 அரசு பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் தொடங்கப்பட்டது.

இந்த முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தின்மூலம் குழந்தைகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து

கலோரி 293.40
புரதம் 9.85 g
கொழுப்பு 5.91 g
இரும்பு 1.64 g
கால்சியம் 20.41 g

முதல்வரின் காலை உணவுத்திட்டம் எல்லாருக்கும் எல்லாம் தரும் தமிழ்நாட்டைக் கட்டமைக்கும்.