காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா: கிரிக்கெட் வீரர் நடராஜன் பங்கேற்பு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் விளையாட்டு விழா மிக கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விளையாட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர் திரு.டி.நடராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விழாவில் சிவகங்கை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல தலைவர் திரு.சி. ரமேஷ் கண்ணன் கௌரவ விருந்திரனராக பங்கேற்றார்.


செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் மாணவ,மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ,மாணவியர் களுக்கு சிறப்பு பரிசுகளை கிரிக்கெட் வீரர் நடராஜன் வழங்கினார்கள். பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் நடராஜன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி திரு நடராஜன் சிறப்புரையாற்றி பேசும் போது.
கடின உழைப்பை பின்பற்றினால் வாழ்வில் எத்துறையிலும் சாதிக்கலாம் என்றும் வியைாட்டுத்துறையில் சாதிக்க விரும்புகிறவர்கள் உடல் ஆரோக்கியத்தை கவனமாக பாதுகாக்க வேண்டுமென்றும் கூறினார். விளையாட்டுத்துறைக்கு உடலே மூலதனம் என்றார். நேரம் தவறாமை,ஒழுக்கம், கடின உழைப்பு இவை மூன்றும் ஒரு மனிதனை உயர்த்தும் செயல்பாடுகள் என்றார். திறமையிருந்தால் எந்த மூலையில் இருந்தாலும் உலகப் புகழ் பெறலாம் என்பதற்கு நானே உதாரணம் என்றார். வாழ்வில் கஷ்டப்பட்டால் மட்டுமே வெற்றி நிலைக்கும் என மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் பேசியதோடு, தனது வாழ்வில் நடைபெற்ற சில நிகழ்வுகளையும் உதாரணமாக் கூறினார்.ஏழ்மை நிலையில் இருந்தபோது உதவியவர்களையும், கை துாக்கிவிட்டவர்களையும் நாம் என்றைக்கும் மறக்ககூடாது என்றார்.


கொளரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய ரமேஷ் கண்ணன் ,

“ தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”

எனக் கூறி மனிதராகப் பிறந்தால் நற்புகழ் பெறவேண்டும் என்றார். திரு.நடராஜன் அவர்களின் குறிக்கோளை ஏழை மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிப்பது, அதற்கான விளையாட்டுத் திடல் அமைத்தது குறித்துப் பேசினார்.


பள்ளியின் சேர்மன்(தாளாளர்) திரு எஸ்.பி.குமரேசன் தனது உரையில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களை வாழ்த்தினார், புகழ் பெற்றால் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றார். அப்புகழைப் பெற மாணவர்கள் பெருமுயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
பள்ளியின் துணை சேர்மன் திரு.அருண்குமார் பேசும் போது எத்துறையில் நீங்கள் வெற்றியடைந்தாலும் உங்களின் பணிவே உங்களை சமுதாயத்தில் உயர்த்தும் என்றார்.


பள்ளியின் முதல்வர் திருமதி உஷாராணி வரவேற்புரை வழங்கினார். துணை முதல்வர் திருமதி பிரேம சித்ரா நன்றியுரை நல்கினார். ஆசியர்களும் மாணவர்களும் விழா ஏற்பாடுகளை சிறப்பகாச் செய்திருந்தனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்