மக்களவைத் தேர்தல் : ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் அறிவிப்பு..

நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க, தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துள்ளது. வைகோவுக்கு ஒரு மாநிலங்களவையும், ஈரோடு மக்களவைத் தொகுதியையும் தி.மு.க ஒதுக்கியுள்ளது.

அதன்படி, ஈரோடு மக்களவைத்தொகுதியில் ம.தி.மு.க பொருளாளர் கணேச மூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.