முரசொலி நிலம் குறித்து அவதூறாகப் பேசிய டாக்டர்.ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசனுக்கு தி.மு.க நோட்டீஸ்

முரசொலி நில விவகாரம் தொடர்பாக தாங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசன் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என தி.மு.க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முரசொலி நில விவகாரம் தொடர்பாக தாங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசன் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என முரசொலி சார்பில் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளும் குற்றம்சாட்டின. இந்த சர்ச்சை குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தகுந்த பதிலடிகளைக் கொடுத்து, ஆதாரம் சமர்ப்பிக்கத் தயாரா என எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்தனர்.

பின்னர், பா.ஜ.க மாநில செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் முரசொலி நிலம் குறித்துப் புகார் அளித்தார்.

பா.ஜ.க பிரமுகர் அளித்த புகாரின் பேரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உடனடியாக முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உத்தரவின்படி தி.மு.க அமைப்பு செயலாளரும், முரசொலி அறக்கட்டளை அறங்காவலருமான ஆர்.எஸ்.பாரதி ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஆனால், புகார் அளித்த பா.ஜ.க சீனிவாசனும், தலைமைச் செயலாளரும் வாய்தா வாங்கினர். பொய்ப் புகார் அளித்தவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார் ஆர்.எஸ்.பாரதி.

இந்நிலையில் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.கவின் சீனிவாசன் ஆகியோருக்கு, முரசொலி அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், முரசொலி நிலம் தொடர்பாக தெரிவித்த கருத்துகளுக்கு 48 மணிநேரத்துக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே …

மகாராஷ்டிர முதல்வராக மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு

Recent Posts