நீட் தேர்வு இல்லையென்றாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு தேவை: காரைக்குடியில் கார்த்திசிதம்பரம் பேட்டி..

காரைக்குடி காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது நீட் தேர்வு குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கையில் நீட் தேர்வு தேவையில்லையென்பது தமிழகத்தின் பெரும்பாலோரின் விருப்பமாக உள்ளது. அரசு பள்ளியில் படித்து மருத்துவராக பணிபுரியும் பல மருத்துவர்கள் நீட் தேவையில்லை என்கிறார்கள். நகர்புற மாணவர்கள் கோட்சிங் சென்டர்களில் பயிற்சி எடுக்கின்றனர். ஆனால் கிராமப்புற மாணவர்களின் நிலை மோசம், நீட் தேர்வை தடை செய்தாலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அவசியம் தேவை என்றார்.
மேகதாட்டு குறித்த கேள்விக்கு தேசிய கட்சியாக இருந்தாலும் காங்கிரஸ் மாநில நலம் சார்ந்தே செயல்படும், தமிழக முதல்வர் ஸ்டாலின் பின்னாள் இப்பிரச்சனையில் தமிழக காங்கிரஸ் துணை நிற்கும் என்றார்.
நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு

“இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது
அவர்களது உரிமை, அவர்களை நடிகன் என்று பார்ப்பது தவறு” என்றார்.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேசுகையில் காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் பேரல் 112 டாலர் விற்றபோதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.60 விற்றது. இன்று பேரல் விலை 66 டாலர் விற்கும் நிலையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 மேல் விற்பனையாகிறது. வரிகள் அதிகம் விதித்ததால் தான் இந்த நிலை. என்றார்.
ஜிஎஸ்டி வரி மக்களை வாட்டி வதைக்கிறது. பயங்கர குளறுபடி உலகின் எல்லா நாடுகளிலும் ஜிஎஸ்டி வரி அமலில் உள்ளது.ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு பொருளுக்கும் 2 முதல் 24 சதவிகிதம் வரை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்