உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது: ப.சிதம்பரம் கிண்டல்..

உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது என முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.
அவரது டிவிட் பதிவு
உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது!

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ100 ஐத் தாண்டியது

கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணை விலை 105 டாலரைத் தாண்டியது, ஆனாலும் பெட்ரோல் விலை ரூ 65 ஐத் தாண்டவில்லை!

இன்றைய நிலைக்கு ஒரே காரணம்
மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை!
இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது

திரு மோடி அரசின் கொடூரத் தன்மையை மக்கள் நாள் தோறும் அனுபவிக்கிறார்கள்