எல்.ஐ.சி பங்குகள் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு Rs.42,500 கோடி இழப்பு..

எல்.ஐ.சி பங்குகளின் வர்த்தகம் இன்று தொடங்கியது. சந்தையில் ஏற்கெனவே கணிகப்பட்டதை போல முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட விலையை விட குறைவாகவே பட்டியலானது.

ஒரு பங்கு ரூ.949க்கு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் 8.6 சதவீதம் குறைந்து 867 ரூபாய்க்கு வர்த்தகத்தை தொடங்கியது. ஆனால் குறைந்தபட்ச விலையாக ரூ.860 வரைக்கும் விலை சரிந்தது.

எல்.ஐ.சி. பட்டியலாகும்போது சுமார் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு இருந்தது. ஆனால் பட்டியலான பிறகு சுமார் 42,000 கோடி ரூபாய் வரை சந்தை மதிப்பு குறைந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.