ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் யானைப்பள்ளத்தில் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். யானைப்பள்ளம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு நாளைக்கு 143 மில்லியன் லிட்டர் நீர் சுத்தகரிக்கப்படுகிறது.