2019-20 தமிழக பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள் ..

சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, தமிழக அரசின் பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு பேரவையில் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதி யமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யப்படுவதால், இந்த பட் ஜெட் சலுகைகள் நிறைந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த் துள்ள நிலையில் குடிநீர் திட்டங்கள், விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் அதிக முக்கியத்துவம் இருக்கும் என கூறப்படுகிறது.

இனி நேரலையில் செய்திகள்…

 

அரசு ஊழியர்கள் சம்பளம் & ஓய்வூதியத்துக்கு 85 ஆயிரம் கோடி

அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காக ரூ. 55,399.75 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது

அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்காக ரூ. 29,627.11 கோடி ரூபாய் செலவிடப்படும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமாக ரூ. 85,026.86 கோடி செலவு செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்: ரூ. 1,986 கோடி செலவில் புதிய சாலைகள்

வரும் நிதியாண்டில் 1,986 கிமீ நீளமுள்ள சாலைகளில் ரூ.1142 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

உற்பத்தி சேவை துறைகளில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்க அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கிராம விளையாட்டு போட்டிகள் நடத்த ரூ. 25 கோடி ஒதுக்கீடு

சென்னையில் விரிவான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ரூ.1546 செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி

உள்ளாட்சித் துறைக்கு ரூ. 18,273 கோடி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு

2698 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன.

வேளாண் இயந்திரமயமாக்கலுக்காக ரூ.172 கோடி ஒதுக்கீடு

சென்னையில் புதிய மெட்ரோ ரயில் திட்டம்: மீனம்பாக்கம்- வண்டலூர், மாதவரம் -கோயம்பேடு- சோழிங்கநல்லூர்

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,681 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை மீனம்பாக்கம் முதல் வண்டலூர் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடத்தை நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டத்தின் கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 வழித்தடங்கள் அமைக்கப்படும்.

மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம்- கோயம்பேடு பேருந்து நிலையம் வரை 52.01 கி.மீ நீளமுள்ள வழித்தடங்களில் திட்டம் செயல்படுத்தப்படும்.

மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தின் மூலம் சென்னை பெருநகரப் பகுதிகளில் மெட்ரோ ரயிலின் சேவைப்பகுதி 172.91 கி.மீ ஆக அதிகரிக்கும்.

ரூ. 1600 கோடியில் புதிய மீன்பிடித் திட்டம்
மீன்வளத்துறைக்கு, 927.85 கோடி ஒதுக்கீடு

வங்கக்கடலில் 1600 கோடி திட்ட மதிப்பில் மீன்பிடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 500 இழுவலை படகுகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்காக 170.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி, மார்த்தாண்ட துறை ஆகிய இடங்களில் கடல் அரிப்பு தடுப்பான் அமைக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம், பூம்புகார் துறைமுகத்தில் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.

420 கோடி செலவில் தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் மீன்பிடி துறைமுகங்களை கட்ட அனுமதி.

ஒக்கி புயலுக்கு பிறகு மீனவர்களிடமிருந்து கரையோரத்திற்கு சீரான தொலைதொடர்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மீனவர்கள் தகவல் தொடர்புக்காக 18 உயர்மட்ட கோபுரங்கள், 18 கட்டுப்பாட்டு அறைகள் கட்டப்பட்டுள்ளன.
அத்திக்கடவு – அவனாசி திட்டத்துக்கு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு

37 அணைகளில் கட்டமைப்பை புனரமைக்கும் பணிகளை 2-வது கட்டமாக மேம்படுத்தப்படும்

அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் தொடங்க உள்ளது

அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு
மேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.

அண்ணா பல்கலையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை திருப்பி செலுத்த 456 கோடி ரூபாய் ஒதுக்கீடு
விலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும்.

தீவன அபிவிருத்தி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

75,448 பெண்கள் இலவச கறவை மாடு திட்டத்தால் பலன் பெற்றுள்ளனர்.

விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் 10,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உரிய காலத்தில் பயிர்க்கடன் திரும்ப செலுத்துவோருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

தமிழக அரசின் கடன் 3.55 லட்சம் கோடி ரூபாயில் இருந்து,3.97 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்காக வரும் நிதியாண்டில் வட்டி மட்டும் ரூ. 33.226 கட்ட வேண்டிய சூழல் ஏற்படும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்திக்கடவு – அவனாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும். இதற்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு

கொடுங்கையூரில் கழிவு நீரை சுத்திகரிக்க ரூ. 2235 கோடி ஒதுக்கீடு

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஸ்ரீதர் குழு பரிந்துரையை குறித்து ஆய்வு செய்யப்படும்

சென்னையில் ரூ. 2000 கோடி செலவில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் கட்டிடம் அமைக்கப்படும். அதில் 2 லட்சம் கார்கள், 4 லட்சம் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்கப்படும்.

வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு

கஜா புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.1700 கோடி ஒதுக்கீடு.

நலிவடைந்த பிரிவினருக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3958 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

சென்னை, மதுரை, கோவையில் மின்சாரப் பேருந்துகள்

மொத்தம் 2000 மின்சார பேருந்துகள் வாங்கப்படும். சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.

இயற்கை வேளாண்மையை மேம்படுத்த மாவட்டங்கள் தோறும் மையங்கள்

பால்வளத்துறைக்கு 258.45 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் 2698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்து 896ல் இருந்து 5 ஆயிரத்து 198 கடைகளாக குறைக்கப்பட்டுள்ளன.
20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்

பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,919 ஆக குறைந்துள்ளது.

90 சதவீத மானியத்துடன், 2 ஆயிரம் சூரிய ஒளி பம்ப் செட்டுகள் வழங்கப்படம்

கூட்டு பண்ணை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

விவசாயத்துறைக்கு 10,500 கோடி ஒதுக்கீடு

உழவர் உற்பத்தியாளர் 4 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏழைகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம்

ஏழைகளுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது இதன்படி, இயற்கை மரணத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையும், விபத்தில் மரணமடைவோருக்கு ரூ. 4 லட்சம் தொகையும். நிரந்தர ஊனத்துக்கு ரூ, 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இதற்கான பிரிமியம் தொகையை செலுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மிழக பட்ஜெட்; ஓபிஎஸ் உரை:

அரசு நிலத்தில் 5 ஆண்டுகள் வசிக்கும் குடும்பங்களுக்கு வரன்முறை படுத்தப்பட்டு வழங்கப்படும்.

மாற்று திறனாளிகளுக்கு 3000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்

ஊரக வளர்ச்சித்துறைக்கு 18273 கோடி ரூபாய் ஒதுக்கீடு

விவசாயத்துறைக்கு ரூ. 10,500 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்; ஓபிஎஸ் உரை:

மத்திய அரசின் நிதி பங்களிப்பு குறைந்து வரும் போதிலும் தமிழக அரசு சொந்த நிதி ஆதாரங்களை திரட்டி வருகிறது.