ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களை சந்தித்த போது..
மக்கள் தற்போது சிங்கத்தை விட பசுவைக் கண்டுதான் அதிகம் பயப்படுவதாக ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பசுவை ஏற்றிச் சென்றதால், பசுப்பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்களை உதாரணமாக சுட்டிக்காட்டி லாலு பிரசாத் யாதவ் பேசினார். அப்போது, சோனிப்பூர் கால்நடைச் சந்தைக்கு விற்பனைக்குக் கூட மாடுகளை யாரும் அழைத்து வருவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
முன்பெல்லாம் மாமிசம் உண்ணும் சிங்கம் உள்ளிட்ட மிருகங்களைக் கண்டுதான் மக்கள் பயப்பட்டதாகவும், ஆனால் தற்போது வீட்டுப் பண்ணைகளில் வளர்க்கும் தாவர உண்ணிகளான மாடுகளைக் கண்டே அதிகம் பயப்படுவதாகவும் கூறினார். இது மோடி அரசின் பரிசு என்றும் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்தார்.