ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தான். குற்றவாளிகள் நாடாளக்கூடாது என்று கமல் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் பாதையில் சென்றுகொண்டிருக்கும் நிலையில் மாநில அரசைக் குறித்தும், தமிழக பிரச்சினைகள் குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் அரசாங்கம் குறித்து கமல் தன் ட்விட்டர் பக்கத்தில், ”ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்” என்று ட்வீட் செய்துள்ளார்.