தகவல் திருட்டைத் தடுக்க வருகிறது புதிய சட்டம்!

தகவல் பாதுகாப்புச் சட்டத்திற்கான வரைவைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா குழு வெள்ளை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

மின்னணு தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் தகவல் திருட்டு தவிர்க்க முடியாத சிக்கலாக உருவெடுத்துள்ளது. அரசுகளின் இணையதளத்தில் இருந்து தனியார் நிறுவனங்களின் இணையதளங்கள் வரை இணையத் திருடர்களிடம் இருந்து தப்ப முடிவதில்லை. ஆதாருக்கான தேசிய அடையாள ஆணையத்தின் வலைத்தளத்தையே முடக்கி, தகவல்களை திருடி விடுகிறார்கள். இதைவிட பேராபத்தாக வங்கிக் கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டு, பணத்தையும் சுரண்டி விடுகிறார்கள். கடந்த ஆண்டு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை ப்ளாக்  செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

இந்தச் சிக்கலைத் தவிர்க்கும் வகையில், எதிர்தகால கவல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் தாக்குப் பிடித்து, தகவல் திருட்டை தடுப்பதற்கான வலிமை மிக்க சட்டத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதற்காக நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 10 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைத்திருந்தது. அந்தக் குழு தகவல் தடுப்பு சட்டத்தை உருவாக்குவதில், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த வெள்ளை அறிக்கையை  வெளியிட்டுள்ளது. அதில், பெருநிறுவனங்களுக்கான தொழில் முனைவோரை உருவாக்குதல், புதிய முயற்சிகள் ஆகியவை வளர, தகவல் தடுப்பைத் தடுப்பதற்கான உறுதியான அமைப்பை உருவாக்குவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் உள்ள 7 முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்தச் சட்டம் உருவாக்கப்படும் என்றும் அந்தக்குழு தெரிவித்துள்ளது.  தகவல்க பாதுகாப்புச் சட்டம் வலிமையாக அமைய, ஆர்வம் உள்ளவர்கள் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் தங்களது ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு ஸ்ரீ கிருஷ்ணா குழு கேட்டுக் கொண்டுள்ளது.

 

Sri Krishna committee present a white paper on data protection law