புயலாக மாற வாய்ப்பு:
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்,
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றார். தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 7-ம் தேதி வாக்கில் தெற்கு ஆந்திரா, வட தமிழகம் நோக்கி வரக் கூடும் என்றார்.
மேலும் பேசிய அவர் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூரில் 14 செ.மீ மழை பெய்துள்ளதாக தொவித்தார். திருவாடானை, ஆடுதுறை, திருத்துறைபூண்டியில் 8 செ.மீ மழை பெய்துள்ளதாக கூறினார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
டிச.5 முதல் தெற்கு ஆந்திரா, வட தமிழக ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார். சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.