கர்நாடகாவில் 70 பேர்கொண்ட காங்கிரஸ் பரப்புரைக் குழு: டி.கே.சிவக்குமார் தலைமையில் அமைத்தார் ராகுல்!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி 70 பேர் கொண்ட காங்கிரஸ் பரப்புரைக் குழுவுக்கு கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். இந்தக் குழுவின் தலைவராக கர்நாடக மாநிலத்தின் மின்சாரத்துறை அமைச்சரான டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  குஜராத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்ற போது அந்த  மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவினர் அணுகிவிடாமல் கர்நாடகாவில் கொண்டு வந்து “பாதுகாப்புடன்”  வை்ததிருந்தவர்தான் இந்த டி.கே.சிவக்குமார். சுருக்கமாக சொல்லப்போனால், பாஜகவில் அமித் ஷாவை எப்படி தேர்தல் புலி என்கிறார்களோ, அதைப்போல காங்கிரசின் டி.கே.சிவக்குமாரையும் சொல்லலாம். அதனால்தான், கர்நாடகாவில் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, மிக வலிமையான பிரச்சாரக் குழுவை இவர் தலைமையில் அமைத்துள்ளது கட்சி மேலிடம்.  குஜராத் தேர்தலுக்குப் பிறகு கட்சியின் வலிமையையும், தமது தலைமையின் செல்வாக்கையும் உரசிப்பார்ப்பதற்கான உரைகல்லாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை ராகுல்காந்தி கருதுவதாக கூறப்படுகிறது. இதனால் , கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரசுக்கும் ,பாஜகவுக்கும் இடையேயான கடும் போட்டிக்கான களமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.         

Congress President Rahul Gandhi approved a 70-member Pradesh Campaign Committee, with DK Shivakumar designated as the Chairman, in Karnataka 

11 வது ஐபிஎல் ஏலம்: தலா ரூ.11 கோடிக்கு விலை போன மணீஷ் பாண்டே, கே.எல்.ராகுலு

ஆப்கானிஸ்தானில் ஓரே வாரத்தில் மூன்றாவது வெடிகுண்டு தாக்குதல்: 95 பேர் பலி

Recent Posts