குடிப்பதை குறைக்கலாம் ஆனால் முழுமையாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கருத்து தொிவித்துள்ளாா்.
கமல்ஹாசன் கடந்த 21ம் தேதி தனது கட்சியின் பெயா் மற்றும் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்து சில அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். இந்நிலையில் பூரண மது விலக்கு தொடா்பாக தனது நிலைப்பாட்டையும் அவா் விளக்க முற்பட்டுள்ளாா்.
அந்த வகையில், தற்போதைய அரசியல் சூழலில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் பல பூரண மதுவிலக்கு என்று கூறி வருகின்றன. இவ்வாறு பூச்சாண்டி காட்டக் கூடாது. மது குடிப்பதை குறைக்கலாம். ஆனால் முழுமையாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது. ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மதுவை விரும்பாதவா்களாக மாற்ற முடியாது.
அப்படி மாற்றினால் கள்ளினால் ஏற்படும் கொடுமைகளை விட பொிய அளவிலான கொலைகள் பல நடக்கும். மதுவை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது. இது உடம்பு கேட்கும் வியாதி.
அனைவரும் கட்சியின் கொள்கை, கொள்கை என்று கேட்கின்றனா். மக்கள் நலம், தமிழகத்தின் வளம் தான் கொள்கை என்று வைத்துக் கொண்டால் எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் போடலாம். கொள்கை என்பது வேறு, திட்டம் என்பது வேறு. திட்டத்தின் பட்டியலே கொள்கை என்று நினைக்கின்றனா்.
கிராம மேம்பாடு என்பதே எங்கள் கொள்கை. கிராமங்களில் என்ன செய்யப் போகிறோம் என்பதே எங்கள் திட்டம். கிராம மேம்பாட்டைப் போன்று விவசாய மேம்பாடு என்ற கொள்கையின் கீழ் பல திட்டங்களை வைத்துள்ளோம் என்று கமல்ஹாசன் தொிவித்துள்ளாா்.